Wednesday, November 02, 2011அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டன் சம்பந்தன் குழுவினரை சந்திக்காமை வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏற்க முடியாது. இலங்கையின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்புடன் பேசாது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என அமைச்சர் சம்பிக ரணவக்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
சர்வதேச அழுத்தங்களின்போது இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுகிறது. எனவே அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றியைப் பெற்றுத்தரப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment