Thursday, November 17, 2011புலிகளின் கப்பல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கைக் கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் புலிகளின் கப்பல்கள் இயங்கி வருவதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடற்படையினர், ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனமான சர்வதேச கடல்எல்லை அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடல் பாதுகாப்பு தொடர்பில் காலியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கடல் எல்லை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் கப்பல் போக்குவரத்திற்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது எனவும் சில நாடுகள் இவ்வாறு ஆதரவளித்துள்ளதாக இலங்கைக் கடற்படை குற்றம் சுமத்தியுள்ளது.
No comments:
Post a Comment