Thursday, November 17, 2011தாருஸ்மன் தலைமையிலான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைத்திருக்க வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆரவான அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாருஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிபுணர் குழுவினரை இலங்கையில் சாட்சியங்களை திரட்ட சந்தர்ப்பம் அளித்திருந்தால், புலிகளின் பிரச்சாரத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்க மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் சர்வதேச பிரச்சார வலையமைப்பை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக புலம்பெயர் மக்கள் விவகரம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன விவகாரம் என இரண்டு பிரிவுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளினால் மேற்குலக நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உறவுகளை மீளமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கவுன்ஸிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெடியவன், இமெனுவெல் பிதா மற்றும் ருத்ரகுமாரன் போன்றவர்கள் பாரியளவில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைநாட்டப்பட்ட சமாதானத்தை நல்லிணக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் பாரியளவில் அரசியல் தலைவர்களை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதனை தடுப்பதற்கு அதிகளவில் சமூக நலத் திட்டங்களையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment