Thursday, November 17, 2011தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் இணங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment