Thursday, November 17, 2011புதுடெல்லி:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சென்றிருந்தார். அப்போது நியூயார்க்கில் ஜான்எப் கென்னடி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அப்துல்கலாமிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டனர். நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்காக வந்த அப்துல்கலாமிடம் முதலில் ஒரு தடவை சோதனை நடத்தினார்கள்.
விமான கதவுகள் மூடப்பட்டு, புறப்படுவதற்கு தயாரான நேரத்தில் பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் வந்து ஏர்-இந்தியா விமானத்தின் கதவை திறக்க உத்தரவிட்டனர். பிறகு விமானத்துக்குள் சென்று அப்துல்கலாமின் ஷீவை கழற்றச் செய்து சோதனையிட்டனர். ஏர்-இந் தியா விமான ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டனர். அப்துல்கலாம் இந்த சம்ப வத்தை பெரிது படுத்த வில்லை. என்றாலும் அவ ருக்கு ஏற்பட்ட அவமதிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. உடனடியாக அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத் தது. பா.ஜ.க. உள்பட எல்லா கட்சிக்காரர்களும் அமெ ரிக்காவுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து நடந்த சம்பவத்துக்காக அப்துல் கலாமிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண் டது. இதற்கிடையே அப்துல் கலாமிடம் அநாகரீகமாக நடந்து கொண்டவர்கள் யார் என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நியூயார்க் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment