Thursday, November 17, 2011

நோர்வேயின் தேவையை இலங்கையில் நிறைவு செய்வதற்கு இடமளிக்க விரும்பாமல் நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை தோற்கடித்தோம்-விஜித்த ஹேரத்!

Thursday, November 17, 2011
இலங்கையில் நோர்வே மேற்ககொண்ட சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதான செயற்பாடுகளும் வெற்றியடையப்போவதில்லை என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால்தான் நோர்வேயின் தேவையை இலங்கையில் நிறைவு செய்வதற்கு இடமளிக்க விரும்பாமல் நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை தோற்கடித்தோம். அந்த வகையில் நோர்வே அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய மக்கள் விடுதலை முன்னணியே பாரிய பங்காற்றியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் தோல்வி தொடர்பில் நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அந்த அறிக்கையை நாங்கள் இன்னும் ஆராயவில்லை. ஆராய்ந்து முடிந்ததும் அது தொடர்பில் கருத்து வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment