Thursday, November 17, 2011

சிறுவர் கைது நடவடிக்கை தடுக்கப்பட்டது : அனோமா திசாநாயக்க!

Thursday, November 17, 2011
ரன்முத்துகல சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள் சிலரை பொலிஸார் கைது செய்யவிருந்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கிறது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவர்களை கைது செய்ய தயாரானதை அறிந்து கொண்டவுடன் தாம் குறித்த இடத்திற்குச் சென்றதாக அதிகாரசபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவிக்கிறார்.

அதன் பின்னர் அதன் சட்ட நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி சிறுமிகளை கைது செய்யவிருந்த நடவடிக்கையை தடுத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இதன்போது ரன்முத்துகல சிறுவர் இல்லம் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பபட்டது. அதன் நாளாந்த நடவடிக்கை மற்றும் நிர்வாக வியூகம் பெண் பிள்ளைகளுக்கு தகுந்த மட்டத்தில் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment