Monday, November 14, 2011

பிரபல கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரீபக் தற்கொலை!

Monday, November 14, 2011
பிரபல கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரீபக் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 55. பாலியல் பலாத்காரம் தொடர்பாக போலீஸ் அவரை விசாரித்ததால் பதட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் தற்கொலை செய்து கொண்டபோது சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி அவரது அறையில் இருந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து ரேடியோவில் வர்ணனை செய்வதற்காக ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்தின் சார்பில் தென் ஆப்பிரிக்கா சென்றார் ரீபக்.

இவர் தெற்கு சன் நியூலேன்டில் உள்ள ஹோட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு நடந்துள்ளது.

ரீபக், போலீசாருடன் பேசிய பிறகு மிகவும் பதற்றமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக போலீசார் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அவர் எதற்காக இந்த துயர முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அவரின் சாவில் எவ்வித மர்மமும் இல்லை என்று போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

ரீபக்கின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஆஸ்திரேலியாவின் "சிட்னி மார்னிங் ஹெரால்டு', இந்தியாவின் "தி ஹிந்து' உள்ளிட்ட பிரபல நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1956, மார்ச் 6-ம் தேதி பிறந்தார் பீட்டர் ரோபக். இவருடைய பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 355 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 33 சதம் உள்பட 17,588 ரன்கள் குவித்தவர்.

1980-களில் சோமர்செட் அணியின் கேப்டனாக இருந்தவர். 1988-ம் ஆண்டு விஸ்டன் விருதை வென்றார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 1991-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மிகச்சிறந்த எழுத்தாளர் என்று பெயரெடுத்த இவரின் மறைவுக்கு ஹெரால்டு உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளன. இதேபோல் இந்திய விளையாட்டு பத்திரிகை சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2001ஆம் ஆண்டு இவர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு அணிக்கு பயிற்சி அளித்தபோது 3 தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை பிரம்பால் அடித்ததாகக் குற்றம்ச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment