நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததும் அதில் உள்ள விடயங்களையும் நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே எதனையும் கூறமுடியும் - மகிந்த சமரசிங்க!
Monday, November 14, 2011
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சில தினங்களில் வெளிவரவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததும் அதில் உள்ள விடயங்களையும் நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியுள்ளது என பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் நோர்வேயின் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே எதனையும் கூறமுடியும். அறிக்கை தொடர்பில் முக்கிய விடயங்களை நாம் ஆராயவேண்டியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றமை தொடர்பில் அந்நாட்டின் நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் வினவியபோதே அமைச்ர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் ஒஸ்லோவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியிடும் நிகழ்வில் இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் விசேட தூதுவராக செயற்பட்ட எரிக்சொல்ஹெய்ம் கலந்துகொண்டிருந்தார்.

No comments:
Post a Comment