


Thursday, November 10, 201117 வது சார்க் அரச தலைவர்களது மாநாடு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் மாலைத்தீவில் அட்டு நகரில் ஆரம்பமாக உள்ளது.
அட்டு நகரின் ஹிதாது சம்மேளன மத்தியஸ்தானத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதல் பங்கு கொள்வதன் பொருட்டு சலக சார்க் நாடுகளின் தலைவர்களும் தற்போது அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலளார் கமலேஸ் ஷர்மாவும் அந்த மாநாட்டில் பங்கு கொள்ள உள்ளார்.
இவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டுக்காக தாம் சகல உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெறும் ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து அரச தலைவர்களது மாநாடு இடம்பெறும்.
இதற்கிடையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை நேபால் நாட்டு பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
No comments:
Post a Comment