Wednesday, November 02, 2011கடந்த ஒக்டோபர் 8 ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல்களின் போது தெரிவு செய்யப்பட்ட 420 பிரதிநிதிகளில் 410 பேர் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை தேர்தல் செயலகத்திடம் கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட 245 உறுப்பினர்களுள் 241 பேர் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 131 பேருள் ஒருவர் மாத்திரம் தமது விபரங்களை கையளிக்க வில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 15 பேருள் 13 பேர் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஜே.வி.பி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, சுயேட்சை குழுக்களின் அனைந்து உறுப்பினர்களும் தமது சொத்து, பொறுப்பு விபரங்களை கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 4 பேர் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களின் மூவர் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 30 ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் சொத்து விபரங்களை கையளிக்குமாறு ஆணையாளர் அறிவித்திருந்தார்.
எனினும், இதுவரையிலும் தமது விபரங்களை வெளியிடாத உறுப்பினர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எஞ்சியிருந்த 23 உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது தெரிவான உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ம் திகதிக்கு முன்னதாக தமது சொத்து விபரங்களை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்;பட்டுள்ளது.
No comments:
Post a Comment