Wednesday, November 2, 2011

விமானம் முன் சக்கரம் திடீர் மக்கர் : 231 பயணிகள் தப்பினர்!

Wednesday, November 02, 2011
வார்சா: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணம் நெவார்க்கில் இருந்து போலந்து நாட்டின் வார்சா நகருக்கு, நேற்று 231 பயணிகளுடன் விமானம் சென்றது. அங்குள்ள ஏர்போர்ட்டில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, சக்கரத்தை கீழே இறக்கும் கியர் இயங்காததை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் ஒரு மணிநேரத்தும் மேலாக வானிலேயே வட்டமடித்து கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. விமானத்தின் எரிபொருள் கொட்டப்பட்டது. பிறகு சக்கரம் இல்லாமல் தரையில் உரசியபடி விமானம் இறங்கியது. இதனால் விமானத்துக்கு கீழே சிறு தீ ஏற்பட்டு, புகை வெளியானது. அதை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

உடனடியாக அனைத்து பயணிகளும் எமர்ஜென்ஸி வழியில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது பற்றி தெரசா என்ற பயணி கூறும்போது, ‘விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தபோது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். பிரார்த்தனை செய்தபடி இருந்தோம். நாங்கள் இப்போது உயிரோடு இருப்பதற்கு பைலட்தான் காரணம். மிகவும் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment