Wednesday, November 2, 2011

டிசம்பர் 1 முதல் அமல் சென்னையில் ‘பிளாங்கெட் எல்’ விசா!

Wednesday, November 02, 2011
சென்னை : இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் அமெரிக்காவில் இருக்கும் அதே நிறுவனங்களுக்கு மாறி செல்லும் பிளாங்கெட் எல் வகை விசா, சென்னை துணை தூதரகத்தில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக பணிகளின் தலைமை அதிகாரி நிக்கோலஸ் மேன்ரிங் கூறியதாவது: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வழங்கப்படும் ‘எச்ஒன்பி’ விசா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பணிக்காக செல்வோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, 2010ல் 54,111 பேர் பெற்றனர். 2011ல் இதுவரை 67,195 பேர் பெற்றுள்ளனர். அமெரிக்கா வழங்கும் ‘எச்ஒன்பி’ விசாவில் 53 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இது, 18 சதவீதம் வளர்ச்சி. கடந்த அக்டோபர் முதல் இதுவரையில் சென்னை துணை தூதரகம் மூலம் 2 லட்சத்து 391 விசா வழங்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் உள்ள 5 அமெரிக்க துணை தூதரகங்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளன. இது, கடந்த 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் வளர்ச்சியாகும்.

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனங்களுக்கு மாற்றிக் கொண்டு செல்லவே Ôபிளாங்கெட் எல்Õ வகை விசா வழங்கப்படுகின்றன. இந்த வகை விசாக்கள் ஏற்கனவே சென்னையை தவிர்த்து, மற்ற 5 இடங்களில் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களில் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ‘எல்’ வகை விசாக்கள், சென்னையில் உள்ள துணை தூதரகத்தின் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment