Tuesday, November 22, 2011

கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு சமாதானத்தை ஏற்படுத்த அடித்தளமாக அமையும்!

Tuesday, November 22, 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்த அறிக்கை இந்நாட்டின் இனப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் மக்களிடையே நல்லிணக்கப் பாட்டையும், ஐக்கியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கும் ஒரு சிற ந்த அடிதளமாக அமைந்துள்ளது.

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கும், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட் டுள்ள பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக் கையாக இந்த ஆணைக்குழுவை நியமிக்கவில்லை என்றும் எதிர் காலத்தில் நாட்டில் நிரந்தர சமாதானம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக கடந்த கால அனுபவங்களை கருத்திற் கொள்ள வேண்டுமென்பதற் காகவும், நாட்டின் நன்மையை கருத்திற்கொண்டு இந்த ஆணைக் குழுவை ஜனாதிபதி அவர்கள் நியமித்தார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித் துள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் நாட்டின் நன்மையை கருத்திற்கொண்டே இந்த ஆணைக்குழுவை நியமித்தார். கடந்த காலத்தில் ஏதாவது தவறு கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் திரைமறைவில் நடந்திருந்தால் அவை பற்றி தகவல்களை அறிந்து அவ்விதம் குற்றமிழைத்தவர் களை தண்டிக்கும் உன்னத நோக்கத்தில் இந்த ஆணைக்குழுவை நியமித்து, அதன் அறிக்கையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த அறிக்கை மீது சர்வதேச சமூகம் அக்கறை கொண்டிருந்தாலும் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த ஆணைக்குழுவை அரசாங்கம் நியமிக்கவில்லை. ஜனாதிபதி அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், நாட்டு மக்களும் இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து அதன் மூலம் நாட்டின் மேம்பாட்டுக்காக செய்த தவறுகளை திருத்திக் கொள்வதே இவ் வாணைக்குழுவை நியமித்தமைக்கான பிரதான காரணமாகும்.

இவ் ஆணைக்குழு தெரிவிக்கும் யோசனைகள், சிபாரிசுகளை ஜனாதி பதி அவர்களே ஆராய்ந்து அவை பற்றி தக்க நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். இவ் ஆணைக் குழுவின் விடயங்கள் குறித்து தனது ஆலோசனையையும் சிபாரி சையும் செய்திருக்கலாம் என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, இவ்வாணைக்குழுவின் அறிக்கை இந்நாட்டு மக்கள் அனை வருக்கும் பல பாடங்களை கற்றுக் கொள்வதற்கு உதவியாக அமையலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழு இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத் தின் விளைவுகள் பற்றியும் அதையடுத்து இடம்பெற்ற உண்மை நிகழ்வுகள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2010ம் ஆண்டு மே மாதத்தில் நியமிக் கப்பட்டது. இவ் ஆணைக்குழுவின் அறிக்கையை தனது ஆலோ சகர் சகிதம் ஜனாதிபதி அவர்கள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவ் வறிக்கையை பகிரங்கப்படுத்துவது பற்றிய தீர்மானத்தை எடுப்பார்.

இவ் ஆணைக்குழுவுக்கு தனது அறிக்கையை பகிரங்கமாக வெளி யிடுவதற்கான அதிகாரம் இல்லை. அவ்வறிக்கையை பகிரங்கப் படுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதி அவர்களுக்கே உண்டு.

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நோர்வே அரசாங்கத்தின் அனு சரணையுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதான தீர் வொன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகின.

2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் வெற்றிகரமான நிறைவு பெற்ற பின்னர் ஏற்பட்ட சில நிகழ்வுகள் மீண்டும் ஏற்படுவதை தடுக்கும் எண்ணத்துடனேயே இவ் ஆணைக்குழு தன்னுடைய விசாரணை களை நடத்தியது. இவ் ஆணைக்குழுவின் முன்னால் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் ஆஜராகி வாய்மூலமான வாக்குறுதிகளை அளித்தனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்து மூலமான வாக்குறுதிகளையும் ஆணைக்குழு பரிசீலனைக்கு எடுத் துக் கொண்டது.

இந்த வாக்கு மூலங்களையும் எழுத்து மூலமான மகஜர்களையும் நன்கு அவதானமாக ஆராய்ந்த பின்னரே ஆணைக்குழு தனது அறிக்கையை முழுமையாக தயாரித்துள்ளது.

பல்வேறு தராதரங்களை கொண்ட மக்கள் ஆணைக்குழுவுக்கு முன் ஆஜராகி தங்கள் துயரக் கதைகளை எடுத்துரைத்து, நிவாரணத்தை கேட்டு வேண்டி நின்றனர்.

ஆணைக்குழு வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தங்கள் முன் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு அதிகமான வாய்ப்பு களை பெற்றுக் கொடுத்தது. அதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட இந்த மக்களின் துன்ப, துயர கதைகளை கேட்டறிந்து அப் படியான வேதனைக்குரிய நிகழ்வுகள் மீண்டும் ஏற்படுவதை தடுத்து விடலாம் என்று ஆணைக்குழு நினைத்து, அதற்கமைய சகல அம்சங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் விசாரணைகளை விரிவான அடிப்படையில் மேற்கொண்டு இவ்வறிக்கையை சமர்ப் பித்தது.

சில சர்வதேச அரசாங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் சுயா தீன விசாரணைகளை நடத்த வேண்டுமென்று தெரிவித்த கண்ட னங்களை ஆணைக்குழு அங்கத்தவர்கள் நன்கு உணர்ந்திருந்த போதிலும் அவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் விசாரணைகள் மூலம் கிடைக்கும் சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக் கையை தயாரித்துள்ளனர்.

இதனால், வெளிநாட்டிலிருந்து வரும் அநாவசியமான அழுத்தங்களை பொருட்படுத்தாமல் நாட்டின் மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கையில் உண்மையான இன ஐக்கியத்தையும் மக்களிடையே இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் அசையாத நம்பிக்கை வைத்திருக்க முடியும்.

No comments:

Post a Comment