Tuesday, November 22, 2011உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பெர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் திகதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு இந்த அறிக்கை பாரியளவில் கைகொடுக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிக்காட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஓர் சிறந்த சந்தர்ப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையை துரித கதியில் பகிரங்கப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment