Wednesday, November 16, 2011பொலன்னறுவை, கதுறுவெல பகுதியிலுள்ள வீடியோ கடையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த இடத்திலிருந்த ஆபாச புகைப்படங்கள் அடங்கிய கணணியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment