Wednesday, November 16, 2011

சென்னை ஆவடியில் உள்ள படை பயிற்சி மையத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு அலைமோதிய இளைஞர்கள்!

Wednesday, November 16, 2011
சென்னை :ஆவடியில் உள்ள படை பயிற்சி மையத்தில், இந்திய ராணுவத்துக்கு சிப்பாய் வர்த்தக பணி, பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர் பணிகளுக்கு நேரடி தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் ஆகியவற்றுக்கு தேர்வு நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவு 1 மணிக்கே படை பயிற்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் திரண்டனர். அதிகாலை ஐந்து மணிக்கு தேர்வு தொடங்கியது. ராணுவ கர்னல், டைரக்டர் துஷார் பகத் தலைமையில் ராணுவ அதிகாரிகள், படிப்பு சான்றிதழ், ஆவணங்களை சரிபார்த்தனர். வருவாய்த் துறை அதிகாரிகள், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களை வாங்கி பார்த்தனர். இவர்களில் 500 பேர், உயரம் குறைவாக இருந்ததால் தேர்வில் இருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டனர்.

நேற்றைய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1.6 கி.மீ. தூரம் ஓட்டம், 9 அடி பள்ளம் தாண்டுதல், புல்&அப்ஸ், பேலன்சிங் பீம் உள்ளிட்ட தேர்வுகள் இன்று நடக்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம், நேர்முக எழுத்து தேர்வில் பங்கேற்பார்கள். இதிலும் வெற்றி பெற்றவர்கள்தான் ராணுவ வேலை க்கு தேர்வு செய்யப்படுவார்கள். வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் இருந்து 50க்கும் குறைவானவர்களே வந்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் சென்னை மாநகர இணை கமிஷனர் சங்கர், அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment