Wednesday, November 16, 2011

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இராஜினாமா!

Wednesday, November 16, 2011
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது:-

ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி அலுவல்களை மேற்கொள்வதன் பொருட்டு மனோ கணேசன் இராஜினாமா செய்வதாக தெரியவந்துள்ளது.

தனது இராஜினாமா குறித்து மனோ கணேசன் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அறியக்கிடைக்கிறது.

இதன்படி மனோ கணேசனின் வெற்றிடத்திற்கு கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகுமாயின் அதற்கு மனோ கணேசன் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஐனநாயக மக்கள் முன்னணியின் கோரிக்கை.

இக்கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி லண்டன் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment