Wednesday, November 16, 2011

தமிழ் புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது!

Wednesday, November 16, 2011
தமிழ் புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

எனினும், புலிகளின் ஈழக் கனவுக்காக தொடர்ந்தும் செயற்படுவோருக்கு எதிராக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வன்முறைகளையும் பிரிவினைவாதத்தையும் பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

32 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட போதிலும் சில நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2009ம் ஆண்டில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் நிதி சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பெயர் விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை.

புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் புலிக் கொடிகளை ஏந்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment