Sunday, November 20, 2011

கல்முனையில் வாகன விபத்து: ஒருவர் பலி-ரயிலில் மோதி காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, November 20, 2011
கல்முனை பிரதான வீதி கட்டையடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை நோக்கிச் சென்ற டிப்பர் வண்டியும் அக்கறைப்பற்று நோக்கிச் சென்ற லொரியும் மோதியதில் இன்று முற்பகல் எட்டு மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் செங்கல் ஏற்றிச் சென்ற லொறியொன்றின் உதவியாளர் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

விபத்தில் காயமடைந்த மூவரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தலவாக்கலையில் ரயிலில் மோதி காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தினைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார். நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறி்ப்பிட்டனர்.
தலவாக்கலை பொலிஸார் விபத்து தொடர்பிரான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment