Saturday, November 19, 2011ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழில்களை நிறுவ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய தூதுவர் நொபுஹிரோ ஹோபோ இதனைத் தெரிவித்துள்ளதாக த பிஸ்னஸ் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின், புவியியல் அமைப்பு, பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் போன்ற காரணங்களால், ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை நிறுவ விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை வர்த்தம் தொடர்பிலான கொள்கை குறித்து தெளிவுப் படுத்த வேண்டும் எனவும் நொபுஹிடோ ஹோபோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment