Saturday, November 19, 2011சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 94-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தியின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன், மற்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், பூவராகவன், சாய்லட்சுமி, சைதை ரவி, ஜே.எம். ஆரூண் எம்.பி, திருநாவுக்கரசர், சேம. நாராயணன், ஜே.எம். புஷ்பராஜன், குரோம்பேட்டை டி.என். அசோகன், டி.எம். பிரபாகரன், சூளை ராஜேந்திரன், ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, ராயபுரம் மனோ,
மணிபால், அகரம் கோபி, ஆர். குணசேகரன், கொளத்தூர் கோபால், வி.பி. வேலு, புல்லட் சாகுல், வி.எம். அரவணன், கப்பல்போக்கு வரத்து துறை கலங்கரை விளக்க ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பி.ஜு. சாக்கோ, வட சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் வில்லிவாக்கம் சுரேஷ், பிரேம்குமார், பால்விலாத், பெரம்பூர் ஜி.பி. பிரகாஷ், சதீஷ்குமார், ராஜமானிக்கம், முன்னானள் கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர், விஷ்னு வரன் ரெட்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர். இதையடுத்து ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திரா காந்தியின் 94-வது பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கான உறுதி மொழியை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வழியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆசியோடு தமிழக காங்கிரசை வலுப்படுத்துவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து காங்கிரசை வலுப்படுத்துவதே எனது லட்சியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்திரா சிலைக்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் கு.கொண்டல்தாசன், ஐ.என். டி.யு.சி. மாநில செயல் தலைவர் சந்தான கிருஷ்ணன், நிர்வாகிகள் டி.சண்முகம், ஜி.பிரபு, ஜி.நாகராஜ், ஜி.மணி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
No comments:
Post a Comment