Saturday, November 19, 2011சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்குக்கு, பொது மன்னிப்பு கிடைப்பது தொடர்பில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா தலைமையிலான குழு ஒன்று சவுதி சென்றுள்ளது.
அந்த குழு நேற்றைய தினம், ரிசானா நபீக்கினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 4 வயது சிறுவரின் குடும்பத்தாரை சந்தித்துள்ளனர்.
அந்த நாட்டின் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்கும் பட்சத்தில், ரிசானா நபீகை தண்டனையில் இருந்து பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது குடும்பத்தாருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சாதகமான நிலையை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment