Monday, November 14, 2011
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பினால் சீர்குலைந்து போயிருந்த யாழ்ப்பாணம் இப்போது அதே போன்ற இன்னுமொரு படுபயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கி வருவதாகவும், யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இன்று போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது குறித்து அரசாங்க அதிகாரிகள் கவலை அடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களில் 45ஆயிரம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை மாணவர்களிடம் விற்பனை செய்து வந்த மாணவர் குழுவொன்றை சமீபத்தில் கைது செய்துள்ளனர். இந்த மாணவர்க ளுக்கு போதைப் பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாண வர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து இவர்களுக்கு யார் போதைப் பொருளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த போதைபொருள் பாவனையில் ஈடுபட்ட மாணவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த மாணவன் விசாரணையின் போது தனக்கு போதைப் பொருளை விற்பனை செய்ய கொடுத்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளான்.
14 வயது மாணவன் ஒருவனும் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவனும் போதைப்பொருளுக்கு அடிமை யாகி இருப்பதாகவும் அறிவிக்கப் படுகிறது.
இப்போது யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவிற்கும் அடிமை யாகயிருப்பதாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட மாணவர்களை யாழ்ப்பாணத்து நீதவான் வைத்திய சோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத் திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment