Monday, November 14, 2011
கிளர்ச்சியாளர்கள் கொள்ளையர்கள் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
போட்டோ பிரதி இயந்திரம் உள்ளிட்ட கட்சியின் சொத்துக்களை கிளர்ச்சியாளர்கள் கொள்ளையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் ரோஹண விஜேவீரவின் 22ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரோஹண விஜேவீரவின் கொள்கைகளை கிளர்ச்சியாளர்கள் திரிபுபடுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பௌதீக சொத்துக்கள் கொள்ளையிடப்படுவது பற்றி கவலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் கிளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் பன்றிகளை களவாடியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பன்றிகளை தமது குழுவில் இணைத்துக் கொள்ள அவர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ரோஹண விஜேவீரவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள நிலைமைகளுக்கு ஏற்ப சோசலிச கோட்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ரோஹணவின் சித்தாந்தமாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் சோசலிச கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள ரோஹண விஜேவீர விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment