Monday, November 14, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கிமிடையிலான 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ஆம் திகதி!

Monday, November 14, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கிமிடையிலான 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடத் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் பிரதிநிதிகள் குழு அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நாடு திரும்பியிருக்கும் நிலையில் அரசாங்கத் தரப்பினருடன் நடைபெறவிருக்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப் படுமாயின் அதனை அரசாங்கத்தின் சிபாரிசாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு விடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு வருமா என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார். நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன். மாவை சேனாதிராஜா, சுரேஷ், எம்.ஏ.சுமந்திரன், கனகேஸ்வரன் ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜயசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment