Thursday, November 03, 2011பலஸ்தீன் UNESCO வின் பூரண அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. ஒக்டோபர் 31 திங்கட்கிமை ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற பலஸ்தீனத்திற்கு ஐ.நா. பொதுச் சபையில் பூரண அங்கத்துவம் வழங்குவது தொடர்பான அதி முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில், 107 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் 52 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் ஐ.நா.வில் பலஸ்தீன் பூரண அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐர்மனி பலஸ்தீனத்தின் அங்கத்துவத்துக்கு எதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியன ஆதரவாக வாக்களித்தன. பிரித்தானியா வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்துகொண்டது.
இவ் வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் வெளியுறவுக் கொள்கையின் பிளவுகளை வெளிக்காட்டிய சம்பவமாகவும் கருதப்படுகின்றது. அதன் 27 அங்கத்துவ நாடுகள் சார்பாக வாக்களித்துடன், ஏனையவை எதிராக வாக்களித்தன.
‘இன்றைய வாக்களிப்பு யுனெஸ்கொவின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை 195 ஆக உயர்த்தியுள்ளது’ என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவித்தது.
ஐ.நா.வின் பூரண அங்கத்துவ உறுப்பரிமைக்கான கட்டளையை பலஸ்தீனியர்கள் உளரீதியாக ஒரு வெற்றியாகக் கண்டாலும், யுனெஸ்கோ இதற்காக பாரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
யுனெஸ்கோவிற்கு அமெரிக்கா வழங்கும் 80 மில்லியன் டொலர் உதவி வாபஸ் வாங்கப்படலாம் என்ற அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த செயல் யுனெஸ்கோவுக்கான எமது ஒத்துழைக்கும் தன்மையை சிக்கலாக்கலாம்’ என யுனெஸ்கோவுக்கான அமெரிக்க ஸ்தானிகர் டேவிட் டி. கில்லியொன் வாக்கெடுப்பின் பின் தெரிவித்தார்.
பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை, இன்று ஒரு ‘வெற்றியின் தினம்’ தான். கடந்த பல தசாப்தங்களாக அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளை குறைப்பதற்கு உதவலாம்.
பலஸ்தீன் ஜநாதிபதி மஹ்மூத் அப்பாசின் ஆலோசகர்களில் ஒருவரான சப்ரி சைதம் கூறுகையில்: “இன்றைய நாள் பலஸ்தீனர்களுக்கு ஒரு சரித்திர நாளாகும். எம்மைப் பொறுத்தவரை, சுதந்திரத்தை அடைவதற்கான எமது போராட்டத்தின் பல தூண்களில் ஓர் அரசியல் தூணாகுவதுடன் நாம் முன்னரை விட சுதந்திரத்திற்கு அன்மித்துவிட்டோம் என்றே நம்புகின்றேன்” எனக் கூறினார்.
இஸ்ரேலின் நிலைப்பாடு நேர் எதிராகவுள்ளது: “இந்த தீர்வு யுனெஸ்கோவிற்கு ஒரு துயரமாகும் …. என யுனெஸ்கோவுக்கான இஸ்ரேலிய ஸ்தானிகர் நிம்ரொட் பர்கன் கூறினார். “ஒரு தலைப்பட்சமான பலஸ்தீனத்தின் திட்டம் அடிமட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுடன் சமாதான உடன்படிக்கைக்கான சாத்தியங்களையும் அப்புறப்படுத்தியுள்ளது” என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் அவிட்கோர் லைபர்மன் கூறுகையில்: “எனது சிபாரிசு தெட்டத் தெளிவானது. பலஸ்தீனத்துடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டிப்பதற்கான பலத்தைப் பிரயோகிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந் நிலையில் காஸாவில் ஐ.நா.வின் தீர்மானம் தொடர்பாக எவ்வித அசைவுகளும் காணப்படவில்லை. நேற்றைய வெள்ளிக்கிழமையை, ‘கோபத்தின் நாள்’ என ஹமாஸ் ஆதரவாலர்கள் மேற்குக் கரையில் பிரகடணஞ் செய்தனர்.
பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா.வில் உரையாற்றுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் ஐ.நா.வின் அங்கத்துவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியா: “ஐ.நா.வின் கட்டளை சுதந்திரத்தைப் பெற்றுத் தராது” எனக் கூறியதுடன், “எமது பலஸ்தீன மக்கள் தேசமொன்றுக்காக பிச்சைக் கேட்கவில்லை. தேசங்கள் என்பவை ஐ.நா.வின் தீர்மானங்களினால் உருவாக்கப்படுபவையுமல்ல” என அவர் கூறினார்.
No comments:
Post a Comment