Thursday, November 03, 2011இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகம் நடாத்தும் சமுர்த்தி திறன் எழுச்சி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சி இன்று (03.11.2011) வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறும் இக் கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும சமுர்த்தி வாழ்வாதார திட்டம் மற்றும் சமுர்த்தி வங்கிக்கடன் மூலம் தங்கள் உற்பத்திகளை மேற்கொண்டுவரும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை விற்பனைப்படுத்தும் முகமாக இக்கண்காட்சி இடம்பெறுகின்றது.
சமுர்த்தி உற்பத்தியாளர்களின் திவிநெகும உற்பத்திகள், விவசாய, கைத்தொழில், கால் நடை வளர்ப்பு, மீன்பிடி உற்பத்திகள் என்பன இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி சமுர்த்திப் பணிப்பாளர் பீ.குணரட்னம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment