Thursday, November 3, 2011

பிரான்ஸின் புலிகள் ஆதரவாளர்களிடையே முறுகல்!

Thursday, November 03, 2011
பிரான்சில் புலிகள் ஆதரவாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியான நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள தமிழ் இணைப்புக் காரியாலயத்தின் அருகில் உள்ள நெடியவனின் காரியாலயத்திற்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு தொடக்கம் பிரான்ஸ் பாதுகாப்பு பிரிவு அந்த நாட்டில் இயங்கும் புலிகள் ஆதரவுசெயற்பாடுகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்படி, புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment