Saturday, November 26, 2011

சுமார் இருபது வருட இடைவெளியின் பின்னர் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை நேற்று சென்றடைந்துள்ளார்!

Saturday, November 26, 2011
சுமார் இருபது வருட இடைவெளியின் பின்னர் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை நேற்று சென்றடைந்துள்ளார். யாழ். கோட்டை மீதான புலிகளது முற்றுகைப் போரையடுத்து 1990 ம் ஆண்டுடன் புத்தபகவான் சிலைகளும் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு இடித்தழிக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்கு மாற்றீடாகவே நேற்று மீண்டும் படையினரால் யாழ்.கோட்டையினுள் புதிய புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட புத்தர் சிலைகளுக்கு தொடர்ந்தும் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

ஓல்லாந்தரினால் கட்டப்பட்ட யாழ்.கோட்டை பின்னர் பிரிட்டிஸ்காரர் வசம் வந்து பின்னர் இலங்கை படையினரது முகாமாகியிருந்தது. இம்முகாம் மீது 1990ம் ஆண்டில் புலிகள் முற்றுகை போர் ஒன்றை நடத்தியிருந்தனர். முற்றுகையினை முறியடிக்க தற்போது சிறையிலுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையில் படையினர் முற்பட்டிருந்தனர். எனினும் அம்முயற்சி தோல்வியடைந்த நிலையில் படையினர் தப்பியோடியிருந்தனர்.

கோட்டையினை கைப்பற்றிய புலிகள் படையினர் வழிபாட்டிற்கென அமைத்திருந்த புத்தபகவான் சிலைகளையும் அகற்றியிருந்தனர். அவ்வாறு அகற்றப்பட்ட புத்தபகவான் சிலைகளே மீள நிறுவப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த கால யுத்தங்காரணமாக சேதமாகியுள்ள யாழ்.கோட்டையினை நெதர்லாந்து அரசு சுமார் 100 மில்லியன் நிதியுதவியுடன் மீள கட்டிவழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment