Saturday, November 26, 2011

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

Saturday, November 26, 2011
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.களுத்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளினால் குறித்த படைச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ரீ56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பல்வேறு உண்மைகள் புலப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த படைச் சிப்பாய் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment