Saturday, November 26, 2011புதுடெல்லி : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) விளம்பர தூதராகிறார் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான். பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில் 1946ல் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது யுனிசெப். யுனிசெப் விளம்பர தூதராக ஆமிர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 30ம் தேதி வெளியிடப்படும்.
அதை தொடர்ந்து குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சத்துணவு கிடைப்பதற்கான கொள்கை களை ஆமிர்கான் பரப்புவார். கடந்த 2007ம் ஆண்டு அமிர்கான் தயாரித்து இயக்கிய தாரே ஜமீன் பர் படம், டைஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப் படும் குழந்தையின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இப்படம் உலக அளவில் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றது குறிப்பிடத் தக்கது. முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த பிரசாரங்களுக்கு விளம்பர தூதராக ஆமிர்கான் இருந்துள்ளார்.
No comments:
Post a Comment