Monday, November 21, 2011

கிளிநொச்சியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சமான சூழல் நிலவிவருகின்றது!

Monday, November 21, 2011
கிளிநொச்சியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சமான சூழல் நிலவிவருகின்றது.

சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வரும்போது அவரது வீட்டிற்கு முன்னால் மறைந்திருந்த மர்ம நபர்கள் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணம், நகை, மற்றும் திறப்புக்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றின் உரிமையாளரே தனது கடையை மூடிவிட்டு மலையாளபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை அவரது வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த முகமூடி தரித்த நபர் நகைக்கடை உரிமையாளரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரொக்கப்பணம், பாதுகாப்புப் பெட்டகத்தின் திறப்பு, கடையின் திறப்பு என்பவற்றைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment