Monday, November 21, 2011

விரிவான அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

Monday, November 21, 2011
விரிவான ஓர் அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்கொள்வதற்கு விரிவான அரசியல் கூட்டமைப்பு ஒன்றை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளைக் கொடி வழக்கில் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சரத் பொன்சேகாவை, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கருஜெயசூரிய நேற்று சிறைச்சாலையில் சந்தித்துள்ளார்.

இதன்போது விரிவான அரசியல் கூட்டமைப்பு ஒன்றை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சரத் பொன்சேகா வலியுறுத்தியதாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக கரு ஜயசூரியவே அவரை பார்வையிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கரு ஜயசூரியவிற்கும், சரத் பொன்சேகாவிற்கும் இடையில் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment