Monday, November 21, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!

Monday, November 21, 2011
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழு இன்றைய தினம் தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர். டி சில்வாவினால் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகம் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதன் பின்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாராளுமன்றில் சமர்ப்பித்தன் பின்னரே அறிக்கை பொது மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 400 பக்கங்களைக் கொண்டது எனக் குறிப்பிடப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சில பரிந்துரைகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலமே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் வெற்றியடையும் என ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment