Monday, November 21, 2011

இந்தியாவில், இலங்கை அகதிகளுக்கு பிறப்புச்சான்றிதல்கள்!

Monday, November 21, 2011
இந்திய அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு பிறப்புச்சான்றிதல்கள் விநியோகிக்கும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

முக்கியமாக சிறார்களுக்கும் குறித்த பிறப்புச் சான்றிதல்கள் விநியோகிக்கப்பட்டன.

குறிப்பாக அசாதாரண சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்த அகதிகள் தாம் தவறவிட்ட மற்றும் பிறப்புச்சான்றிதழ்களை பெற்றிராதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் 13 அதிகாரிகள் குறித்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

இலங்கை அகதிகள் தம் தாயகம் திரும்புவதற்கு கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கு பிறப்புச் சான்றிதழ் பெரிதும் துணை புரியும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அகதி முகாம்களில் பிறந்த சுமார் நூறு குழந்தைகளுக்கு இதன்போது பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment