Monday, November 21, 2011

22 வருடங்களின் பின் மனிதபடுகொலை குறித்து இருவர் கைது!

Monday, November 21, 2011
கண்டி - ஹதரலியத்த காவல்துறை பிரிவில் பல்லேகொட்டுவ பிரதேசத்தில் 1989 ஆம் ஆண்டு வன்முறைச் சம்பவங்களின் போது இடம்பெற்ற மனித படுகொலைகள் தொடர்பில் 2 சந்தேகத்திற்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 22 வருடங்களில் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கலகெதர - ஹதரலியத்த – பல்லேகொட்டு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைதானவர்கள், வன்முறைகளின் போது கொல்லப்பட்ட ஒருவரின் மனைவியும், அவரின் உறவினர் ஒருவமே என்று தெரியவந்துள்ளது.

குறித்த பெண்மணி பிரிதொருவருடன் பேணி வந்த ரகசிய தொடர்பு காரணமாக அந்த மனித படுகொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மனைவியாலும், உறவினராலும் கோடரியால் தாக்கப்பட்டே குறித்த நபர் பலியானார்.

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் மனைவியின் உறவினர், மதுபோதையில் இருந்த போது குறித்த படு கொலை தொடர்பில் பிரிதொருவரிடம் ரகசியத்தை வெளிப்படுத்திய நிலையிலேயே விசாரணைக்களுக்கான தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment