Wednesday, November 16, 2011மாணவர்கள் எட்டுப் பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஹங்வெல்ல பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி ஆசிரியர், சிறுவர்கள் எட்டுப்பேரை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக ஹங்வெல்ல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் சந்தேக நபரான ஆசிரியரை கைது செய்த ஹங்வெல்ல பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
No comments:
Post a Comment