Tuesday, November 15, 2011

துமிந்த சில்வாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, November 15, 2011
பாராளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தது.

பாரத லக்ஷ்மன் பிரேமதசந்திரவின் கொலையினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவை பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்தார்

No comments:

Post a Comment