Tuesday, November 15, 2011

ரிஸானாவைப் பெற்றோர் சந்தித்துள்ளனர்!

Tuesday, November 15, 2011
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கின் பெற்றோர் உட்பட இலங்கையின் பிரதிநிதிகள் சிலர் இன்று அவரை சந்தித்துள்ளனர்.

ரிசானா நபீக் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு இன்று முற்பகல் அவரை சந்தித்ததாக குறித்த குழுவினருடன் அங்கு சென்றிருந்த வைத்திய அதிகாரி கிபாயா இப்திகார்
குறிப்பிட்டுள்ளார்.

இன்று அங்கு சென்றிருந்த குழவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிசங்க விஜேரத்ன ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

மேல் மாகாண ஆளுனர் அலவிமௌலான உள்ளிட்ட மேலும் சிலர் நாளை சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment