Tuesday, November 15, 2011இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்கள் தொடர்பில் மாத்திரமன்றி இந்து சமுத்திரத்தில் கரையோர நாடுகளின் தேசிய பாதுகாப்பு குறித்தும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு, இலங்கையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
காலி விவாதம் 2011’ என்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே பாதுகாப்பு செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்து சமுத்திர கடல்சார் சவால்களை வெற்றிகொள்வதற்காக உபாய ரீதியான ஒத்துழைப்பு என்ற அடிப்படையி;ல் இந்தமுறை காலி விவாத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் அனுபவம் இதன்போது பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப்புலிகள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை தம்வசம் வைத்திருந்த முறைகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விளக்கியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு மற்றும் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் 5 தடவைகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு புலிகளின் 8 கப்பல்களை கடற்படையினர் மூழ்கடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment