Friday, November 25, 2011

வரவு செலவு திட்டம் வாசிக்கப்படுகையில் எதிர்த்தரப்பினர் தாக்கப்பட்டனர்:ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் காலாநிதி விலியம் எப்.ஷிஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்!

Friday, November 25, 2011
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் காலாநிதி விலியம் எப்.ஷிஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் உள்ள விடயங்களை ஆராய்ந்து உரிய தரப்பினர் மற்றும் நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாளில் வெளி்ப்புற நுழைவாயிலில் பாதுகாப்புத் தரப்பினர்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி பராளுமன்ற உறுப்பினர்களை சோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் இதன்போது அவர்களிடம் இருந்த ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட எந்தவொரு ஆவணமும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டம் வாசிக்கப்படும் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்கியதாகவும்ம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment