Friday, November 25, 2011

யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது!

Friday, November 25, 2011
யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகளின் எடுபிடிகளினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகையை அடித்து நொருக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் யாழ் பல்கலைக்கழக சூழல் பதற்றத்துடன் காணப்படுட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரும் புலிகளின் மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் பொதுஅறையில் உள்ள பெயர்ப்பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. .

யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் புலிகளின் எடுபிடிகளினால் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளுடன் பெயர்ப்பலகையையும் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் திடீரென மோட்டார் சைக்கிளில் நுழைந்த மர்மநபர்கள் அடித்து நொருக்கியுள்ளனர். பல்கலைக்கழக செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றது.

மாவீரர் தினத்தை ஒட்டி இராணுவத்தினர் யாழ் பல்கலைக்கழக சூழலில் தமது கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தனர். மாவீரர் தினத்தை ஒட்டிய இந்த பெயர்பலகைத் தாக்குதல் நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக சூழலில் மிகுந்த பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.

No comments:

Post a Comment