Monday, November 14, 2011
புதுடில்லி : நாடு முழுவதும், புதிதாகக் கட்டப்படும் அணு உலைப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று நடக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி, ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கடற்படையின் முன்னாள் தளபதி ராம்தாஸ், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலர் வேணுகோபால், அணு விஞ்ஞானி பார்கவா ஆகியோர் உட்பட, பல தரப்பினர் அடங்கிய சிவில் சமூக உறுப்பினர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் கோரும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதிதாகக் கட்டப்படும் மற்றும் கட்டப்பட உள்ள அணு உலை பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும். மேலும், அணு மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஆய்வு மதிப்பீட்டுப் பணிகள் முடிவடையும் வரை, இந்த தடை உத்தரவு அமலில் இருக்க வேண்டும்.
அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் 2010, அரசியல் சட்டத்திற்கு விரோதம் என, அறிவிக்க வேண்டும். தற்போது செயல்பாட்டில் உள்ள, இனி செயல்பட உள்ள அணு உலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய, நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அணு உலைகள் சப்ளை செய்ய அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும், ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன், இன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:
Post a Comment