Monday, November 14, 2011
இந்தியா மற்றும் சார்க் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக நடந்த போரால் அந்நாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கடந்த 2009ம் ஆண்டு போர் முடிந்த நிலையில், வருமானத்தை பெருக்க, சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் இடிஏ என்று புதிய திட்டம் மூலம் இந்தியா மற்றும் சார்க் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணத்தை ஸி2,500 ஆக உயர்த்த திட்டமிட்டது. இதையடுத்து விசா கட்டணத்தை குறைக்க இந்தியா இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டது.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, 2012 ஜனவரி முதல் உயர்த்தவிருந்த விசா கட்டணத்தை ஸி2,500ல் இருந்து ஸி500 ஆக குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
மேலும், சார்க் நாடுகள் அல்லாத பயணிகளுக்கான கட்டணம் ஸி1,000 ஆக இருக்கும் என்று இலங்கை குடியேற்ற கட்டுப்பாட்டாளர் சுலநந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்களின் பங்கு 27 சதவீதம்.
மேலும் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment