Monday, November 14, 2011
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்கியவர்களில் 15 பேரினால் முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள் விசாரணைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
சாட்சியாளர்களின் சுய விருப்பத்திற்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளவே சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சாட்சியாளர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சி வழங்கிய கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவினால், அழைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சட்டமா அதிபரின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment