Saturday, November 26, 2011

கென்னடி கொலையின் சாட்சியாளர் காலமானார்!

Saturday, November 26, 2011
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் ஒஃப் கென்னடியின் கொலையுடன் தொடர்புடைய சாட்சியாளரான ஊடகவியலாளர் டொம் விக்கெர் காலமாகியுள்ளார்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளரான டொம் விக்கர் தமது 85ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

1963 ஆம் ஆண்டு ஜோன் ஒப் கென்னடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது, அதனை நேரில் கண்ட சாட்சியாளராக இவர் விளங்குகினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் ஒஃப் கென்னடியின் கொலை தொடர்பான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தியதில் இவர் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து டொம் விக்கெர் ஊடகத்துறையில் முக்கிய இடத்தைப் பெறுவதற்கு இந்த சம்பவம் வழிவகுத்திருந்தது.

No comments:

Post a Comment