Wednesday, November 23, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை சிகிச்சைகளுக்காக இன்று தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துவர சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதாக அனோமா பொன்சேக்கா தெரிவிக்கின்றார்.
உடற்கூற்று சிகிச்சைகளுக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இன்று முற்பகல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
எனினும் இன்று மதியம் வரை அவர் அங்கு அழைத்துவரப்படவில்லை.
அது குறித்து அனோமா பொன்சேக்கா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சரத் பொன்சேக்காவை உடற்கூற்று சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட வேண்டும் என அனோமா பொன்சேக்கா கூறினார்.
இன்றைய தினம் எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருந்தும், காலை 10 மணிமுதல் சில மணித்தியாலங்களாக காத்திருந்த போதிலும் சரத் பொன்சேக்கா அழைத்துவரப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பொன்சேக்கா அழைத்து வரப்படாமைக்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது அவரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவர புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்படுவது அவசியமாகும் என அறியக் கிடைத்ததாக அனோமா பொன்சேக்கா மேலும் தெரிவித்தார்.
புதியதொரு உத்தரவு கிடைக்கும் போது அவரின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்றும், சரத் பொன்சேக்காவை மன ரீதியாக வீழ்த்த முடியாது எனவும் அனோமா ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
சரத் பொன்சேக்கா இன்று வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படாமை தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டப்ளியூ. கொடுப்பிலியிடம் வினவிய போது, அது குறித்து சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை தன்னால் எதுவும் கூற முடியாது என்று கூறினார்.
No comments:
Post a Comment