Thursday, November 24, 2011ஜப்பானின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் யசூசி அக்காசி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தெற்கு பெருந்தெரு திறப்பு விழாவில் அக்காசி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்களில் அக்காசி முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் பின்னரும் அக்காசி பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதி ஆரம்ப நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment