Wednesday, November 23, 2011முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் பதவிக் காலத்தில் அவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்படுவதற்கு எதிராக அவசர கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், அதன் தலைவரிடம் கோரியுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 153 சட்டத்தரணிகள் கையெப்பத்துடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டினது, நீதியானதும் சுயாதீனம் கருதி நியமிகக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதன் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி பாராளுமன்ற குழுவொன்றினால் பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தொடர்பாக மாத்திரமே விசாரணகைளை மேற்கொள்ள முடியும் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே நீதியரசர் ஒருவர் ஒய்வுபெற்ற பின்னர் அவரின் பதவிக்காலம் தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்று விசாரணை நடத்துவதானது தற்போதுள்ள நீதிபதிகளை பாதிக்கும் ஓர் விடயமாக அமையும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இதன் பொருட்டு பாராளுமன்ற குழுவொன்றும் நியமிக்கப்படுவதை தடுப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வர வேண்டும் என சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாப்பின் படி அவசர கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற 100 சட்டத்தரணிகளின் கையொப்பத்துடன் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக 153 சட்டத்தரணிகள் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment